"அறம் செய்வோம்"

"அறம் செய்வோம்"

வேந்தர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதுமையான நிகழ்ச்சிகளில் ஞாயிறு தோறும் மதியம் 1:00 மணிக்கு ஒளிபரப்பாகும் பேச்சரங்க நிகழ்ச்சி “அறம்செய்வோம்”.

ஞானசுடர் பேராசிரியர் டாக்டர் ஜெயந்த ஸ்ரீ பாலகிருஷ்ணன் தலைமையில் கல்லூரி மாணவர்களிடையே நடத்தப்படும் இந்நிகழ்ச்சி சமூகத்தில் அறம் செய்ய வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் நல்லறங்களை  வளர்க்கும் நேசமிகு நிகழ்ச்சியாக அமைந்துள்ளது. குறிப்பாக டாக்டர் ஜெயந்த ஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்களின் இனிமையான பேச்சு அறத்தொடு அன்பையும் அறிவையும் ஊக்குவிப்பதாய் அமைந்துள்ளது .மாணவிகளின் கருத்துக்களும் பரிமாறப்படும், இந்த புதுமையான நிகழ்ச்சி நேயர்களிடையே மிகுந்த வரவேற்ப்பைப் பெற்றுள்ளது