'மனம்போல் மாங்கல்யம்'

'மனம்போல் மாங்கல்யம்'
Vendhar TV program Manampol Mangalyam

வேந்தர் டிவியின் திருமண தடை நீக்கும் ‘மனம்போல் மாங்கல்யம்’

வேந்தர் டிவியில் ஞாயிறு தோறும் காலை 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி ‘மனம்போல் மாங்கல்யம்’. இந்த நிகழ்ச்சி பொதுமக்களின் நலன்கருதி நடத்தப்படுகிறது. உரிய வயதைக் கடந்தும் திருமணம் கைகூடாத இளம்பெண்கள் மற்றும் இளைஞர்களின் நன்மைக்காக ‘சுயம்வர பார்வதி யாகம்’ நடத்தப்படுவதே இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சம் ஆகும்.

ஜாதகத்தில் உள்ள தோஷங்களால் ஏற்படும் தடைகளை நீக்க உதவும் இந்த சுயம்வர பார்வதி யாகத்தினை தனியொரு நபர் எளிதாக செய்ய இயலாது என்பதை உணர்ந்து பலபேரின் நன்மைக்காக இந்த யாகத்தினை எவ்விதக் கட்டணமும் இல்லாமல் இலவசமாக வேந்தர் டிவி முன்னின்று நடத்துகிறது.

தமிழ் மேட்ரிமோனி வேந்தர் டிவியுடன் இணைந்து நடத்தும் இந்த யாகம் தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் நடதப்படுவது இன்னொரு சிறப்பம்சம் ஆகும்.

இதுவரை வேலூர், திருச்சி, பவானியில் நடைபெற்ற யாகத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். தற்போது கும்பகோணம் ஆதிரும்பேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற யாக நிகழ்வுகளும், கலந்து கொண்ட வரன்களின் விவரங்களும் நான்கு பகுதிகளாக ஒளிப்பரப்பாகிறது.

எல்லாரும் தடைகள் விலகி, திருமண பந்தத்தில் இணைந்து ‘மனம்போல் மாங்கல்யம்’ பெறவேண்டும் என்ற நோக்கத்தில் தயாரிக்கப்படும் இந்த நிகழ்ச்சி நேயர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி வேந்தர் டிவியில் ஞாயிறு தோறும் காலை 8.30 மணிக்கு ஒளிப்பரப்பாகிறது.

Vendhar TV program Manampol Mangalyam