தமிழக பள்ளி, கல்லூரிகளில் வந்தே மாதரம் பாடல் கட்டாயம்!

தமிழக பள்ளி, கல்லூரிகளில் வந்தே மாதரம் பாடல் கட்டாயம்!
Vande Mataram is compulsory in Schools and Colleges

சென்னை: தமிழக பள்ளி மற்றும் கல்லூரிகளில் வந்தே மாதரம் பாடலை கட்டாயம் பாட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் திங்கள் அல்லது வெள்ளியன்று வாரம் ஒருமுறையாவது கட்டாயம் வந்தே மாதரம் பாடலை பாட வேண்டும். அதே போல், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களிலும் மாதம் ஒரு முறை வந்தே மாதரம் பாடலை இசைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அதோடு, வந்தே மாதரம் பாடலை பாட விருப்பமில்லாதவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது. அப்படி செய்தால் அது, நாட்டின் மீது வெறுப்பை ஏற்படுத்தும் விதமாக அமையும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார். மேலும், சமஸ்கிருதம் மற்றும் வங்கத்தில் பாடத் தெரியாதவர்கள் தமிழில் மொழிபெயர்த்தி வந்தே மாதரம் பாடலை பாடலாம் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Vande Mataram is compulsory in Schools and Colleges