வைரமுத்துவின் அடுத்த பிரம்மாண்ட முயற்சியாக “நாட்படு தேறல்” என்கிற தலைப்பில் 100 பாடல்கள் உருவாகி வருகிறது

தமிழ் சினிமாவின் மூத்த பாடலாசிரியர் கவிப்பேரரசு வைரமுத்து. சுமார் 7500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியிருக்கும் வைரமுத்துவின் அடுத்த பிரம்மாண்ட முயற்சியாக “நாட்படு தேறல்” என்கிற தலைப்பில் 100 பாடல்கள் உருவாகி வருகிறது.

இந்த 100 பாடல்களுக்காக 100 இசையமைப்பாளர்கள், 100 பாடகர்கள், 100 இயக்குனர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.நாட்படு தேறலின் முதல் பாடலான “நாக்குச் செவந்தவரே” என்கிற பாடலை கிருத்திகா உதயநிதி இயக்க, வாகு மசான் இசையமைத்து பாடியிருக்கிறார். இந்நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம்1:30 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியிலும், இரவு 7:00 மணிக்கு இசையருவியிலும் ஒளிபரப்பாகிறது. 

வைரமுத்துவின் இந்த பிரம்மாண்ட முயற்சியின் ஒரு பங்காக பின்னணி பாடகிகள் பி.சுசீலா, சித்ரா, ஹரிணி ஆகிய மூவரும் முதல்முறையாக ஒரே பாடலில் இணைந்திருக்கிறார்கள்.அதேபோல், இசையமைப்பாளர்கள் தேவா, ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ், ஜிப்ரான், என்.ஆர்.ரகுநந்தன் உள்ளிட்ட எல்லாத் தலைமுறை இசையமைப்பாளர்களும் நாட்படு தேறலுக்காக இணைந்திருக்கிறார்கள்.