உப்பும் மிளகும்

உப்பும் மிளகும்
Uppum Milagum cookery show on Vaanavil Television

(திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 12:30 மணிக்கு)

வானவில் தொலைக்காட்சியில், திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 12:30 மணிக்கு "உப்பும் மிளகும்” என்னும் புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

இந்த எளிமையான சிறப்பு சமையல் நிகழ்ச்சியில் நமது இல்லங்களில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு, சுவைமிக்க மனம் மயங்கும் புதிய சுவையில் எளிய சமையல் முறை, அறுசுவையின் தேடலில் தினமும் ஒரு சுவை.

சிறுதானியங்கள் பற்றிய சமையல், பத்திய சமையல், பாரம்பரிய சமையல், சைவ சமையல், வார இறுதியில் சிறப்பு விருந்தினருடன் சமையல் என்று நம்ம வீட்டு சமையல் தொகுப்பாக ஒளிபரப்பாகிறது. இந்நிகழ்ச்சியை சௌமியா தொகுத்து வழங்குகிறார்.

Uppum Milagum cookery show on Vaanavil Television