மேனகா காந்தி மருத்துவமனையில் அனுமதி

மேனகா காந்தி மருத்துவமனையில் அனுமதி
Union Minister Maneka Gandhi admitted to hospital

புது டெல்லி: மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி மேனகா காந்தி(60), உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான பிலிபிட் தொகுதிக்கு இன்று மூளையழற்சி தடுப்பூசி பிரச்சாரத்தை தொடங்கி வைப்பதற்காக சென்றிருந்தார்.

இந்நிலையில், பொதுகூட்டத்தில் பங்கேற்ற மேனகா காந்திக்கு திடீரென வயிற்று வலியுடன் மூச்சுத் திணறலும் ஏற்பட்டது. இதனால் அவர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மேனகா காந்தியின் பித்தப்பையில் கற்கள் இருப்பதாக தெரிவித்துள்ளனர், இதனால் அவர் மேல் சிகிச்சைக்காக டெல்லிக்கு அழைத்து செல்லப்பட உள்ளார்.

Union Minister Maneka Gandhi admitted to hospital