ஊபர்

ஊபர்
Uber expands its coverage area in Chennai

சென்னையில் தனது சேவைகளை விரிவுபடுத்தும் ஊபர்

* ஸ்ரீபெரும்பூதூர், ஒரகடம் மற்றும் செங்கல்பட்டு பகுதிகளுக்கு வசதியான சவாரிகள்

சென்னை, 2017 மே 2: மக்கள் நகரங்களில் பயணிக்கும் முறையை மாற்றி அமைத்த சவாரி பகிர் செயலியான ஊபர் நிறுவனம், ஸ்ரீபெரம்பூதூர், ஒரகடம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளை உள்ளடக்கித் தனது சென்னைச் சேவைப் பகுதியை இன்று விரிவுபடுத்தி உள்ளது.

2014 ஆம் ஆண்டு சென்னையில் அறிமுகமான ஊபர் சென்னையின் முக்கியப் பகுதிகளை இணைக்கும் வகையில் தனது சேவைகளை விரிவுபடுத்தி வருகிறது.  பயணிகளின் ஆக்கப்பூர்வ ஆதரவு காரணமாக விரிவாக்க முனைவு மூலம் புறநகர்ப் பகுதிகளுக்கும், சிறு நகரப் பஞ்சாயத்துகளுக்கும் ஊபர் சேவைகளை வழங்க உள்ளது. 

எனவே அன்றாடம் வேலைக்குப் பயணிக்கவோ, உள்ளூர் மின்தொடர் வண்டி நிலையத்திலிருந்து வீட்டிற்கு விரைந்து வரவோ, பாதுகாப்பான, அனைவருக்கும் ஏற்ற, நம்பகமான சவாரியை ஊபர் வழங்கும்.

விரிவாக்க முனைவு குறித்து ஊபர் தெற்கு, பொது மேலாளர், க்ரிஸ்டியன் ஃப்ரீஸ் கூறுகையில், ‘கடந்த மூன்று ஆண்டுகளாக லட்சக் கணக்கான பயணிகளிடமிருந்து எங்களுக்கும் கிடைத்து வரும் அமோக வரவேற்பே சென்னையில் ஊபரின் வெற்றிக்கான சாட்சியாகும்.  எனவே எங்கள் சேவைப்  பகுதியை மகிழ்ச்சியுடன் விரிவுபடுத்திச், சென்னையில் உள்ள அனைத்து மக்களும் பயனடையும் வகையில், பகிர் சவாரி வசதியை வழங்குகிறோம். இதன் மூலம் இப்பகுதிகளில் வாழும் நுண் தொழில் முனைவோர் சமூகத்தை ஒருங்கிணைக்கும் வாய்ப்பும் எங்களுக்குக் கிடைப்பதால், எங்கள் ஒட்டுனர் பங்குதாரர்களுக்குப் புதிய பொருளாதார வாய்ப்புகளும் உருவாகும்’ என்றார்.

நகரங்களைக் கொண்டாடும் உறுதிமொழிக்கு ஏற்ப, ஸ்ரீபெரும்பூதூர் மற்றும் செங்கல்பட்டுடன், ஊபர் இப்போது திருவொற்றியூரில் இருந்து கோவளத்திற்கும் பயணிகளுக்கான சேவைகளை வழங்கும்.

மேலும் விவரங்களுக்கு:  http://t.uber.com/chennaiexp

Uber expands its coverage area in Chennai