கின்னஸ் சாதனையில் இடம் பிடித்த நீதிபதி

கின்னஸ் சாதனையில் இடம் பிடித்த நீதிபதி
UP judge in Guinness book of world records

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்ட நீதிமன்றத்தில் குடும்ப நல நீதிபதியாக பணியாற்றி வருபவர் தேஜ் பிரதாப் சிங், இவர் கடந்த ஆண்டு மட்டும் 6,065 வழக்குகளுக்கு தீர்வு கண்டுள்ளார்.

நாட்டில் மிக அதிகமான வழக்குகளுக்கு தீர்வு வழங்கிய நீதிபதி பிரதாப் சிங்-ன் இந்த சாதனையை கின்னஸ் புத்தகம் அங்கீகரித்து உள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தேஜ் பிரதாப் சிங் "நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை குறைக்க வேண்டும் மற்றும் வழக்காளிகளுக்கு சரியான தீர்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதே எனது நோக்கம்" எனத் தெரிவித்துள்ளார்.

UP judge in Guinness book of world records