துப்பாக்கி சூடு: மத்திய அரசு அறிக்கை கேட்கிறது

துப்பாக்கி சூடு: மத்திய அரசு அறிக்கை கேட்கிறது
Thoothukudi firing Home minister asks report from TN

புது டெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியது, இதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தூத்துக்குடியில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், துப்பாக்கிச்சூடு தொடர்பாக தமிழக அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ளது. தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து காவல்துறையிடம் உரிய விளக்கம் பெறப்பட்டு, மத்திய அரசுக்கு தமிழக அரசு அறிக்கை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Thoothukudi firing Home minister asks report from TN