திருப்பூர் கிருமிநாசினி சுரங்கப்பாதை

திருப்பூர் கிருமிநாசினி  சுரங்கப்பாதை

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் கூடுவதைத் தவிர்க்க இந்த முயற்சி எடுக்கப்பட்டிருந்தாலும் காய்கறிச் சந்தைகள், மளிகைக் கடைகள், மருந்தகங்கள் போன்றவற்றில் மக்கள் கூட்டம் குறைந்தபாடில்லை.

குழாயின் வழியே அதிக அழுத்தத்தில் தண்ணீருடன் கிருமிநாசினியைச் சேர்த்து பனிப்புகைபோல பொழிய வைக்கின்றனர்.

இந்நிலையில், திருப்பூர் உழவர் சந்தையில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் `கிருமி நாசினி பாதை’ ஒன்றை அமைத்து அசத்தியுள்ளனர். தனியார் நிறுவனம் ஒன்று முன்னெடுத்திருக்கும் இந்த முயற்சிக்குப் பலரிடமிருந்தும் பாராட்டுக்கள் குவிகின்றன.

இந்த சுரங்கப் பாதையை ஒருவர் 3 - 5 நொடிகளுக்குள் கடந்துவிட முடியும். இதனால், ஒரு மணிநேரத்துக்கு சுமார் 650 பேர் வரை இதனால் பயனடைய முடியும்.