சிவகாசி பொத்துமரத்து ஊரணி மந்தகதியில் நடக்கும் தூர்வாரும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி பொத்துமரத்து ஊரணி மந்தகதியில் நடக்கும் தூர்வாரும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகாசி பொத்துமரத்து ஊரணி மந்தகதியில் நடக்கும் தூர்வாரும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி பொத்துமரத்து ஊரணி மந்தகதியில் நடக்கும் தூர்வாரும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சிவகாசி மாநகராட்சி பகுதியில் நிலத்தடி நீர் ஆதாரத்தை பெருக்க கண்மாய், குளங்கள், தெப்பங்களை அமைத்துள்ளனர். இந்த நீர்நிலைகளில் மழைநீர் கேரிக்கப்பட்டு வந்ததால் நிலத்தடி நீர் ஆதாரம் அதிகரிக்கும். போர்வெல் கிணறுகளிலும் நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்கும். இந்நிலையில் சிவகாசி பகுதியில் உள்ள பல தெப்பங்கள், குளங்கள் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி காணமல் போய்விட்டது. இதனால் சிவகாசியில் நிலத்தடி நீர் ஆதாரம் பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில் சிவகாசி நகரின் மைய பகுதியில் உள்ள பொத்து மரத்து ஊரணியில் வேன்ஸ்டாண்ட் அமைத்து ஆக்கிரமித்திருந்தனர். வேன் ஸ்டாண்ட் அகற்றப்பட்டு கடந்த 6 ஆண்டுக்கு முன்பு பொத்துமரத்து ஊரணி தூர்வாரும் பணி நடைபெற்றது. பல லட்சம் மதிப்பில் ஊரணியில் முளைத்திருந்த முட்செடிகள், படர் தாமரை செடிகளை அகற்றி ஆழப்படுத்தினர். இதனிடையே பொத்துமரத்து ஊரணி ஆழப்படுத்தும் பணியின் போது மழை காரணமாக தணணீர் நிரம்பியது.

இதனால் ஆழப்படுத்தும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. இதன் பின்னர் ஊரணி ஆழப்படுத்தும் பணி கிடப்பில் போடப்பட்டது.இதனால் ஊரணி கரையில் பூக்கடை, டீக்கடை, கோயில் அமைத்து மீண்டும் ஆக்கிரமிப்பு செய்ய துவங்கினர். இதனிடையே சிவகாசி எம்எல்ஏ நிதியில் பொத்துமரத்து ஊரணி தூர்வார ரூ.1.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யபட்டது. கடந்த மே 20 ல் பூமி பூஜை நடைபெற்றது. ஆனால் பூமி பூஜை முடிந்து பணிகள் முழு வீச்சில் நடைபெறவில்லை. மந்த கதியில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து அசோகன் எம்எல்ஏ கூறுகையில், பொத்துமரத்து ஊரணி முழுவதுமாக துார்வாரி பூங்கா நடைபாதை, இருக்கைகள் , விளக்குகள், சுற்றுச்சுவர் ஏற்படுத்தப்படும் என தெரிவித்தார்.

கழிவுநீர் கலப்பதால் கலக்கம்
தற்போது தென்மேற்கு பருவ மழை காலம் துவங்கி உள்ளது. மழை காரணமாக தூர்வாரும் பணியில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதனால் தூர்வாரும் பணிக்கு ஒதுக்கீடு செய்ய பட்ட நிதி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. பொத்துமரத்து ஊரணியில் நாராணாபுரம், போஸ்காலனி, புதுத்தெரு ஆகிய பகுதிகளின் கழிவுநீர் கலந்து வருகிறது. கழிவு நீர் கலப்பதை தடுத்து, நீர் வரத்து கால்வாய் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றிட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.