கிறிஸ்மஸ் சீசனுக்கு தயாராகும் "தி ஃபிரெஞ்ச் லோஃப்"

கிறிஸ்மஸ் சீசனுக்கு தயாராகும் "தி ஃபிரெஞ்ச் லோஃப்"
The French Loaf getting ready for Christmas season

சென்னை, அக்டோபர் 25, 2017: இந்தியாவில் அதிவேகமாக வளர்ச்சியடைந்துவரும் பேக்கரி (அடுமனை) சங்கிலித்தொடரான தி ஃபிரெஞ்ச் லோஃப், அதன் வருடாந்திர ‘கேக் மிக்சிங்’ (கேக் தயாரிப்புக்கான உட்பொருட்களின் கலவை) நிகழ்வை அக்டோபர் 25ந்தேதி அன்று புதன்கிழமையன்று மிகச்சிறப்பாக நடத்தியது. இந்த அழகான பாரம்பரியத்தை வருடந்தோறும் தவறாமல் பின்பற்றுவதன் மூலம், பல்வேறு சாதனைகளை உள்ளடக்கிய தனது பயணத்தில் மற்றுமொரு மைல்கல்லை ஃபிரெஞ்ச் லோஃப் எட்டியிருக்கிறது. இந்நிகழ்வில் இதன் கார்பரேட் செஃப் திரு. பூபேஷ் தலைமையின்கீழ் ஃபிரெஞ்ச் லோஃப் உற்சாகமிக்க கேக் தயாரிப்பு நிபுணர்கள், கிளார்க் சாலையிலுள்ள அதன் தயாரிப்பு தொழிலகத்தில் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு சீசனுக்காக பிளம் கேக்குகளை உருவாக்க 17,500 கிலோ எடை கொண்ட பல்வேறு உட்பொருட்களை கலந்தனர். திரைப்பட நட்சத்திரம் ஜனனி ஐயர், குதூகலமான இந்நிகழ்வில் ஆர்வத்தோடு கலந்துகொண்டார். அங்கிருந்த ஃபிரெஞ்ச் லோஃப் குழுவினரோடு உரையாடிய அவர், அவர்களை பாராட்டியதோடு தனது வாழ்த்துக்களையும், ஆதரவையும் அவர்களுக்குத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கேக் ஆர்வலர்களும், விருந்தினர்களும் 1675 கிலோ மொத்த எடை கொண்ட ப்ளம்ஸ், பீச்சஸ், பியர்ஸ், அன்னாசிப்பழம், ஆப்பிள்கள் போன்ற பழங்களையும் 1850 கிலோ டூட்டி ஃப்ரூட்டி, 750 கிலோ பேரீச்சம்பழம், 800 கிலோ உலர் செர்ரிபழங்கள்;, 460 கிலோ முந்திரி பருப்புகள், 350 கிலோ உலர் ஆரஞ்சு தோல்கள், 350 கிலோ இஞ்சித்துருவல்கள், 1,160 கிலோ வெள்ளை உலர்திராட்சைகள், 175 கிலோ கலவைப்பழ ஜாம் ஆகியவற்றை ப்ளம் கேக் தயாரிப்புக்காக கொட்டி கலந்தனர். ப்ளம் கேக்கிற்கான இந்த பொதுவான இடுபொருட்களோடு, கிறிஸ்மஸ்க்காக சுவைமிக்க, வாயில் உமிழ்நீரை வரவைக்கக்கூடிய, ப்ளம் கேக்கிற்காக 46 கிலோ கரம் மசாலா, 25 கிலோ இலவங்கப்பட்டை, 11.5 கிலோ கிராம்பு, 11.5 கிலோ ஏலக்காய், 6 கிலோ ஜாதிக்காய் மற்றும் 3.5 கிலோ புன்னை இலைகள் போன்றவற்றையும் தி ஃபிரெஞ்ச் லோஃப் கேக் தயாரிப்புக்குழுவினர் இக்கலவையில் பயன்படுத்தினர். ப்ளம் கேக்கிற்கே உரிய அற்புத சுவையை வெளிக்கொணர்வதற்காக இக்கலவையானது, 580 லிட்டர் ப்ரீமியம் ரம்மில் ஊறவைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சி குறித்து தி ஃப்ரெஞ்ச் லோஃப் நிறுவனத்தின் கார்பரேட் செஃப் திரு. பூபேஷ் கூறுகையில், “ப்ளம் கேக் தயாரிப்பில் சேர்க்கப்படுகிற இடுபொருட்களின் காரணமாக ஃப்ரெஞ்ச் லோஃப் தயாரித்து வழங்கும் பிளம் கேக், மக்கள் விரும்பி பேரார்வத்தோடு வாங்கும் கேக்காக இருந்து வருகிறது. ஃப்ரெஞ்ச் லோஃப்-ம் மற்றும் அதன் தயாரிப்புகளும் உணவு ஆர்வலர்கள் மத்தியில் தொடர்ந்து மிக பிரபலமாக இருந்து வருகின்றன. இந்த ஆண்டு 17,500 கிலோ எடையில் ப்ளம் கேக் தயாரிப்பதற்காக பல்வேறு இடுபொருட்களை நாங்கள் கலந்திருக்கிறோம். இந்த கேக் தயாரிப்புக்கலவையோடு கரம் மசாலா, இலவங்கப்பட்டை மற்றும் ஏலக்காய் போன்ற சில தனித்துவமிக்க கூட்டுப்பொருட்களையும் இதற்காக நாங்கள் பயன்படுத்தியுள்ளோம். எமது கிறிஸ்மஸ் ப்ளம் கேக்குகள், வாடிக்கையாளர்களின் பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றன. அவர்களது முதல் தேர்வாக ப்ரெஞ்ச் லோஃப் இப்போதும் இருந்து வருகிறது என்று கூறுவதில் நாங்கள் பெருமைகொள்கிறோம்,” என்றார்.

ஓரியண்டல் குசின்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி திரு. ரேனால்டு ஃபெர்னான்டஸ் கூறுகையில், “சென்னையில் உள்ள எங்களுடைய சொந்தத் தயாரிப்பு தொழிலகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பாரம்பரியமிக்க கிறிஸ்மஸ் ப்ளம் கேக் கலக்கும் நிகழ்ச்சியை நடத்துவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் மிகப்பிரம்மாண்டமான வரவேற்பு எங்களது கேக் தயாரிப்புகளுக்கு கிடைத்து வருகிறது. புதிய மைல்கள் சாதனைகளை உருவாக்குவதில் ஃபரெஞ்ச் லோஃப் குழுவால் காட்டப்படுகிற உற்சாகம் மற்றும் பேரார்வம் என்னை வியப்பில் ஆழ்த்த ஒருபோதும் தவறுவதில்லை. அதிக எண்ணிக்கையில் சுவையான ப்ளம் கேக்குகளை உருவாக்குவதில் மற்றுமொரு கிளர்ச்சியூட்டும் பயணத்தை மேற்கொண்டுள்ள செஃப் பூபேஷ் அவர்களுக்கும் மற்றும் அவரது குழுவினருக்கும் நான் எனது பாராட்டுகளையும் மற்றும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்,” என்றார்.

The French Loaf getting ready for Christmas season

[usercontrol: ~/user controls/gallery.ascx ImageUrl=/img/others/French-Loof-25-10-17]