அஸ்ட்ரோவேத் நடத்தும் “தை அமாவாசை முன்னோர்கள் வழிபாடு ”

அஸ்ட்ரோவேத் நடத்தும் “தை அமாவாசை முன்னோர்கள் வழிபாடு ”

மனிதராகப் பிறந்த எல்லோரும் தெய்வத்திற்கும் தமது முன்னோர்களுக்கும் நன்றி செலுத்த வேண்டும். தெய்வ வழிபாட்டின் மூலம் தெய்வத்தின் அருளைப் பெறலாம். முன்னோர்கள் வழிபாட்டின் மூலம் “பித்ரு கடன்” தீர்ந்து அவர்களின் ஆசிகளைப் பெறலாம். அமாவாசை நாட்கள் முன்னோர்களுக்கான நாளாக கருதப்படுவதால், நம் நன்றிகள் அவர்களை எளிதாக சென்றடையும். முன்னோர்களை வழிபட்டு நம் நன்றியை செலுத்த உகந்த நாட்கள் என கருதப்படும் மூன்று முக்கிய நாட்களில் (மகாளய, தை மற்றும் ஆடி) தை அமாவாசை ஒன்றாகும்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்று கூறுவார்கள். அஸ்ட்ரோவேத் தை அமாவாசை அன்று உங்கள் சார்பாக பல சடங்குகளை நிகழ்த்தி அதன் மூலம் சிறந்த பலன்களை உங்களுக்கு பெற்றுத் தர தனது சேவைக் கரங்களை ஆவலுடன் நீட்டிக் காத்திருக்கின்றது.

தை அமாவாசை அன்று பிதுர் தர்ப்பணம், கருப்பசாமி ஹோமம், ஏழைகளுக்கு உணவளித்தல், பசுவிற்கு உணவளித்தல் என்று நாம் செலுத்தும் நன்றி ஏதாவது ஒரு வகையில் நமது முன்னோர்களை சென்றடையும். அவர்களும் மன மகிழ்ந்து நமக்கு ஆசிகளை வழங்குவார்கள். 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மஹோதயம் என்றழைக்கப்படும் அரிய வானியல் நிகழ்வு இந்த தை அமாவாசையன்று வருவது கூடுதல் சிறப்பு.

“இறந்தவர்கள் அல்லது மறு பிறவி எடுத்தவர்கள் எப்படி நாம் அளிக்கும் நன்றியைப் பெறுவார்கள்?” கைபேசியில் நாம் பேசும் போது நமது பேச்சின் ஒலியானது அலைகளாக மாறுவதை நாம் கண்களால் காண முடிகிறதா?. அதன் பாதை நம் கண்களுக்கு தெரிகிறதா? இல்லையே! எப்படி நம்மால் அதை உணர முடிகின்றது. கண்ணுக்கு தெரியாத ஒலி அலைகள் அதனை சுமந்து வந்து நம்மிடம் சேர்க்கின்றது. எனவே நாம் பேசுவதை கேட்க முடிகின்றது. அது போல நாம் செலுத்தும் நன்றி எவ்வகையிலாவது அவர்களை சென்று அடையும். அதன் பாதை நம் கண்ணனுக்கு புலப்படாது. ஆனால் நம் வாழ்வில் ஏற்படும் நல்ல மாற்றங்களின் மூலம் நாம் கண்டுகொள்ள இயலும்.

தை அமாவாசையில் முன்னோர்களை வழிபட்டு அவர்களை திருப்திபடுத்துவதன் மூலம் நாம் பெறும் நன்மைகள் எண்ணிலடங்காதது.

  • இல்லத்தில் தடைபட்ட சுபகாரியங்கள் நடைபெறும்
  •  நீண்டநாளாக வருத்தி வந்த நோய் அகலும்       
  • மனதில் ஏற்படும் கலக்கங்கள் நீங்கி, மகிழ்ச்சி பொங்கும்.

உங்கள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று ஆரோக்கியத்துடன் வாழ அஸ்ட்ரோவேத்  நடத்தும் தை அமாவாசை முன்னோர்கள் வழிபாட்டில் பங்கு கொள்ளுங்கள். உங்களுக்கு நல்லாதரவு வழங்கும் வகையில் உங்கள் சார்பாக AstroVed எடுத்து நடத்தும் சேவைகளை பயன்படுத்திக் கொண்டு வாழ்வில் வளம் பெறுங்கள்.

அஸ்ட்ரோவேத் தை அமாவாசை சேவைகள் :           

  • கேரளாவில்   தர்ப்பணம் – பித்ரு கடன் தீர்க்கும்.           
  • கருப்பசாமி ஹோமம் – பித்ரு சாப நிவாரணம்    
  • பசுக்களுக்கு உணவளித்தல் – முன்னோர்களை திருப்திபடுத்தும்                    
  • ஏழைகளுக்கு அன்னதானம் – வாழ்வில் வளங்களை சேர்க்கும்.                       
  • கோகர்ண பாகவத சப்தாகம் பாராயணம்– கேட்டலும் படித்தலும் கொடிய பாவங்களை போக்கி முக்தி அளிக்கும்

நாள் : 04-02-2019

இடம் : அம்பத்தூர் , சென்னை

மேலும் விவரங்களுக்கு: www.astroved.com +91 9003111077, +91 8754403790