ரயில்நிலையங்களுக்கு ஐ.எஸ். வெடிகுண்டு மிரட்டல்

ரயில்நிலையங்களுக்கு ஐ.எஸ். வெடிகுண்டு மிரட்டல்
Terrorist threat strong security in Chennai railways

சென்னை: தீவிரவாத இயக்கமான ஐ.எஸ். இயக்கத்தின் பேரில் இ.மெயில் மூலம் இந்தியன் ரெயில்வேக்கு ஒரு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது, அதில் " இந்தியா முழுவதும் உள்ள ரெயில் நிலையங்களில் ஜூன் மாதம் முதல் தொடர் குண்டுகள் வெடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது".

இதனால் நாடு முழுவதும் உள்ள அனைத்து ரெயில், ரெயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பயணிகள் பலத்த பரிசோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்களது உடைமைகளும் தீவிரமாக சோதனை செய்யப்படுகிறது.

Terrorist threat strong security in Chennai railways