அரசு பஸ்களில் தட்கல் முன்பதிவு

அரசு பஸ்களில் தட்கல் முன்பதிவு
Tatkal quota in tamilnadu government buses

சென்னை: தமிழ்நாட்டில் 8 அரசு போக்குவரத்து கழகங்களில் சுமார் 20 ஆயிரம் பஸ்கள் உள்ளன.

இதில் சுமார் 1,100 பஸ்கள் நீண்ட தூரத்துக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் பஸ்களாகும்.

இந்த நிலையில் அரசு போக்குவரத்து கழகத்தை மேம்படுத்தும் வகையிலும் நிதி ஆதாரத்தை உயர்த்தும் வகையிலும் புதிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதற்காக 5 மாதங்களுக்கு உயர்மட்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்த குழு ஆய்வு செய்து சில பரிந்துரைகளை அரசுக்கு வழங்கியுள்ளது.

அதன்படி ரெயில்களில் தட்கல் முறை டிக்கெட் முன்பதிவு கடைபிடிக்கப்படுவது போன்று அரசு எக்ஸ்பிரஸ் பஸ்களிலும் தட்கல் முறையில் முன்பதிவு திட்டத்தை கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக பண்டிகை நாட்களிலும், வார இறுதி நாட்களிலும் இந்த திட்டத்தை அமல்படுத்துவது பற்றி பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

Tatkal quota in tamilnadu government buses