3000 வருஷத்துக்கு முன்னாடி காதலர் தினம் கொண்டாடிய தமிழன்... அதுக்கு பேரு காமவேள் விழவு!

3000 வருஷத்துக்கு முன்னாடி காதலர் தினம் கொண்டாடிய தமிழன்... அதுக்கு பேரு காமவேள் விழவு!
3000 வருஷத்துக்கு முன்னாடி காதலர் தினம் கொண்டாடிய தமிழன்... அதுக்கு பேரு காமவேள் விழவு!

3000 வருஷத்துக்கு முன்னாடி காதலர் தினம் கொண்டாடிய தமிழன்... அதுக்கு பேரு காமவேள் விழவு!

ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் தொடங்கிவிட்டாலே அனைவரின் மனதிலும் வழக்கத்தைவிடவும் கூடுதலாக, காதல் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கிவிடுகிறது. ஆனால் சில தமிழ் கோட்பாட்டாளர் இது நம்முடைய விழா அல்ல. மேலைநாட்டாரின் பண்பாடு என்று புறந்தள்ளுவார்கள்.

ஆனால் ஜல்லிக்கட்டைப் போல, காதலர் தினமும் நம்முடைய ஆதிகாலத் தமிழர்களால் கொண்டாடப்பட்டது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. 3000 ஆண்டுகளுக்கு முன்பாகவே நம்முடைய முன்னோர்கள் காதலைக் கொண்டாட விழா எடுத்திருக்கிருக்கிறார்கள். 
காமனுக்கு விழா எடுத்து கொண்டாடியதற்கான பல சான்றுகள் நமக்கு சங்க இலக்கியத்தில் இருந்து கிடைக்கின்றன. 

அகநானூற்றில்,  “பங்குனி முயக்கம்“ , “ கொங்கர் மணி அரையாத்து மறுகின் ஆடும் உள்ளி விழவு“,என்றும் கலித்தொகையில், “மல்கிய துருத்தியுள் மகிழ் துணைப் புணர்ந்து விளையாடும் வில்லவன் விழவு” என்றும் குறிப்பிடப்படுகின்ற காமன் பண்டிகை தான் சங்க காலத்துக் காதலர் தினமாக இருந்திருக்கின்றது.

”நாம் இல்லா புலம்பாயின் நடுக்கம் செய்பொழுதாயின் காமவேள் விழவாயின் கலங்குவள்” என்று கூறப்படுகிறது. அதாவது அவர்கள் கொண்டாடும் காதலர் தினத்தின் போது, நாம் தலைவியைப் பிரிந்திருந்தால், அவள் மிகுந்த வேதனைப்படுவாள் என்று பொருள். 

அந்த குறிப்பிட்ட நாளில், பெண்கள் தங்களை அலங்காரம் செய்து கொண்டு, தங்களுடைய காதலர்களைச் சந்திப்பதற்காகவும் அவர்கள் தங்களுக்காக கொண்டு வரும் பரிசுப்பொருளையும் எதிர்பார்த்து, மகிழ்ச்சியோடு, ஆற்றின் மணற்திட்டுகளில் விளையாடிக் கொண்டே காத்திருப்பார்களாம்.  

இந்த காலத்தில் காதலர் தினம் பங்குனி மாதத்தில் பால்குன நட்சத்திர நாளில் கொண்டாடப்பட்டது. 

இந்த காமவேள் விழவு பற்றிய ஏராளமான குறிப்புகளும் சங்க இலக்கியத்துள் காணப்படுகின்றன.

Parimalar Vijay எழுதிய பதிவு