மானிய விலை ஸ்கூட்டர்: இன்றே கடைசி நாள்

மானிய விலை ஸ்கூட்டர்: இன்றே கடைசி நாள்
Tamilnadu Govt Amma Two Wheeler Scheme last day today

சென்னை: தமிழக அரசின் மானிய விலை ஸ்கூட்டருக்கான விண்ணப்பங்கள் கடந்த ஜனவரி 22-ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்தின் கீழ், விண்ணப்பிக்கும் பெண்களுக்கு 25,000 ரூபாய் மானியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மானிய விலை ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ( பிப்ரவரி 10) என்றும், ஊராட்சி-நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில் இன்று மாலை வரை விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்படும் எனவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கி வைக்கப்படும் என, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

Tamilnadu Govt Amma Two Wheeler Scheme last day today