தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு:தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு:தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஏப்ரல் 14ஆம் தேதி வரை இத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ள முதல்வர் பழனிசாமி, 11 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்தியாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 271ஆக அதிகரித்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதுவரை கோவிட்-19 நோய்த்தொற்றால் இந்தியாவில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. எனினும், வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு திரும்பிய பலருக்கு அடுத்தடுத்து கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிசெய்யப்பட்டு வருகிறது.