கல்லூரி பருவத் தேர்வுகளை ரத்து செய்யக்கோரிய மனு: சென்னை உயர்நீதிமன்றம் ஆணை

  கல்லூரி பருவத் தேர்வுகளை ரத்து செய்யக்கோரிய மனு: சென்னை உயர்நீதிமன்றம் ஆணை

 கடந்த மார்ச் மாதம் நடக்க இருந்த  பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டன. ஊரடங்கு தற்போது தளர்த்தப்பட்டுள்ளதை தொடர்ந்து, இந்த பருவத்தில் நடத்தப்பட வேண்டிய கல்லூரி, பல்கலைக்கழக பருவத் தேர்வுகள் பல்கலைக்கழக மானியக்குழு  விதிமுறைப்படி, கட்டாயம் நடத்தப்பட வேண்டும். இறுதியாண்டு மாணவர்களின் இறுதி செமஸ்டர்களை செப்டம்பர் மாத இறுதிக்குள் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் முறையில் நடத்தி முடிக்க வேண்டும் என மத்திய அரசு  வலியுறுத்தியுள்ளது.சென்னை  உயர்நீதிமன்றம், மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் மற்றும் யூசிஜி 2 வாரங்களில் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.