தமிழக அமைச்சர்கள் பொம்மைகளாக உள்ளனர்

தமிழக அமைச்சர்கள் பொம்மைகளாக உள்ளனர்
Tamil ministers are like doll says thirunavukkarasu

திண்டுக்கல்: தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்தில் தற்போது ஸ்திரமற்ற தன்மை நிலவி வருகிறது, தமிழக அமைச்சர்கள் பொம்மைகளாக உள்ளனர். அவர்களை ஆட்டுவிக்கும் பணியில் மோடி மற்றும் அமித்ஷா ஈடுபட்டு வருகின்றனர். பாரதீய ஜனதா தமிழகத்தில் காலூன்ற பின்புற வாசல் வழியாக முயற்சி எடுத்து வருகிறது. பல்வேறு சதி வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறது.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்கு நீதி விசாரணை வேண்டும் என்பதை நான் வரவேற்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tamil ministers are like doll says thirunavukkarasu