மோடி சாட்டையால் அடித்து விரட்டுவதை போல் போராட்டம்

மோடி சாட்டையால் அடித்து விரட்டுவதை போல் போராட்டம்
Tamil farmers protesting in Delhi jantar mantar

புது டெல்லி: தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் டெல்லியில் உள்ள ஜந்தர்மந்தரில், கடந்த மாதம் 14-ம் தேதி முதல் போராட்டம் நடத்திவருகின்றனர். இந்த போராட்டம் 36-வது நாளை எட்டியுள்ளது.

பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், காவேரி வேளாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், விவசாயிகள் பிரதமர் மோடியை சந்திப்பது போலவும், தாங்கள் அன்றாடம் படும் கஷ்டங்களையும், தங்கள் கோரிக்கைகள் எதையும் மோடி ஏற்கமுடியாது என்பது போலவும், நீங்கள் அனைவரும் உங்கள் தமிழ்நாட்டுக்கு திரும்பிச்செல்லுங்கள் என்றவகையிலும் சாட்டையால் அடித்து விரட்டுவது போல் சித்தரிக்கும் விதத்தில் போராட்டம் நடத்திவருகின்றனர்.

Tamil farmers protesting in Delhi jantar mantar