தமிழ் தலைவாஸ் அணியின் முதல் வெற்றி

தமிழ் தலைவாஸ் அணியின் முதல் வெற்றி
Tamil Thalaivas recorded their maiden victory in Vivo Pro Kabaddi

முதல் முறையாக வெற்றிக்கனியை சுவைத்த தமிழ் தலைவாஸ் அணியினர்

தமிழ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த புரோ கபடி சீசன் 5  போட்டிகளின் ஜோன் பி பிரிவில் 22 வது  மேட்ச் இது.. இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணியும் பெங்களூர் புல்ஸ் அணியும் நாக்பூர் மண்ணில் களம் இறங்கினார்கள் …

தமிழ் தலைவாஸ் அணி இரண்டு முறை இதுவரை விளையாடி ஒரு வெற்றியையும் பெறவில்லை… அதே நேரத்தில் பெங்களூர் புல்ஸ் அணியுடன் மோதி ஒரு புள்ளி வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்கள்..      

ஆரம்பமே அமர்க்களமாக முதல் புள்ளியை பெற்று தமிழ் தலைவாஸ் பிள்ளையார் சுழி போட்டு நம்பிக்கையோடு களம் இறங்கினார்கள்.  

முதல் பாதியில் இரண்டு அணிகளுமே முன்னே பின்னே என்று இருந்தாலும் கடைசி ஐந்து நிமிடத்தில் பெங்களுர் புல்ஸ் பக்கம் ஆட்டம்  போன போது பிரபாத் மற்றும் பிரபஞ்சன் ஆல் அவுட்டில் இருந்து தமிழ் தலைவாஸ் அணியை  காப்பாற்றினார் என்றே சொல்லலாம்…

முதல் பாதி ஆட்டத்தில் பெங்களூர் புல்ஸ் அணியினர் 8 புள்ளிகள் பெற்றனர் ஆல் அவுட் ஆகி விடுவார்கள் என்று  நினைத்த தமிழ் தலைவாஸ் அணியினர் திறமையாக விளையாடி 12 புள்ளிகள் பெற்றதோடு நான்கு புள்ளி வித்தியாசத்தில் முன்னனியில் இருந்தார்கள்.,

இரண்டாம் பாதியில் தமிழ் தலைவாஸ் அணியினர் பெங்களூர் புல்ஸ் அணியினரை ஆல் அவுட் செய்து மூன்று புள்ளிகளை  பெற்று தங்கள் அணிக்கு நம்பிக்கையை ஏற்படுத்தினார்கள். இதே நேரத்தில் பெங்களூர் புல்ஸ் அஜயை டேக்கிளில் அழுத்தி வெளியே அனுப்பி வைத்தார்கள்.  

ஆட்டத்தின் 32 வது நிமிடத்தில் தமிழ் தலைவாஸ் ஆல் அவுட் ஆக்கி பெங்களூர் புல்ஸ் அணியினர் முன்று புள்ளிகள் வித்தியாசத்துக்கு வந்தனர்… அது மட்டுமல்ல ரோகித்குமார் ஆட்டத்தின் போக்கை மாற்றியதில் பெரும் பங்கு வகித்தார் அவர் இன்றைய இரவில் நான்காவது முறையாக  சூப்பர் டென்னும் எடுத்தார். ஆட்டத்தின் 35 வது நிமிடத்தில். ரோகித்தை ரெய்டில் டேக்கிள் செய்து அவரை தமிழ் தலைவாஸ் அணியினர் பெஞ்சுக்கு அனுப்பினார்கள். அதே நேரத்தில் அடுத்த ரெய்டர் அஜய்குமாரையும் வெளியே அனுப்பினார்கள்…

கடைசி ஒன்றரை நிமிடத்தில்  இரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் பெங்களூர் புல்ஸ் அணியினர் பின்னனியில்  இருந்தார்கள்.. ரசிகர்கள் அமோக வரவேற்பும் அவர்களுக்கே இருந்தது… அது  மட்டுமல்ல ரோகித்தை ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தார்கள். ஆனால் தமிழ் தலைவாஸ்  கேட்ட அத்தனை  ரிவியுவிலும் தமிழ் தலைவாஸ் ஜெயித்தார்கள் அதனால் சீசனுக்கு புதிதாய் வந்த தமிழ் தலைவாஸ் பெங்களூர் புல்சை வீழ்த்தி வெற்றி பெற்றார்கள்..

அதே நேரத்தில்  கேப்டன் அஜய்தாக்கூர்  பெஞ்சில்  பெரும்பான்மையாக  இருந்த  பொழுதும்  தமிழ் தலைவாஸ் அணியினர்  வெற்றி பெற்றது பெரிய விஷயம்… ஆட்டத்தின் முடிவில் பெங்களூர் புல்ஸ் அணியின் 24 புள்ளிகளையும் தமிழ் தலைவாஸ் அணியினர் 29  புள்ளிகள் பெற்று 5 புள்ளிகள்  வித்தியாசத்தில் முதல் முறையாக வெற்றிக் கனியை சுவைத்தார்கள்..  

Tamil Thalaivas recorded their maiden victory in Vivo Pro Kabaddi