கவிக்கோ அப்துல் ரகுமான் சென்னையில் காலமானார்

கவிக்கோ அப்துல் ரகுமான் சென்னையில் காலமானார்
Tamil Poet Abdul Rahman passes away in Chennai

சென்னை: கவிஞரும், தமிழ் பேராசிரியருமான அப்துல் ரகுமான் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். சென்னை பனையூரில் உள்ள அவரது வீட்டில் இரவு 2 மணியளவில் மூச்சுத்திணறலால் அவர் உயிரிழந்தார்.

மறைந்த அப்துல் ரகுமானுக்கு வயது 80, இவர் பால்வீதி, நேயர் விருப்பம் உள்ளிட்ட கவிதைகளையும், கரைகளே நதியாவதில்லை போன்ற பல்வேறு கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார்.

1999-ம் ஆண்டு ஆலாபனை கவிதைக்கு சாகித்திய அகாதமி விருது பெற்றிருந்தார். மேலும், தமிழன்னை விருது, பாரதிதாசன் விருது, கலைமாமணி விருது, கம்பர் விருது, உமறுப்புலவர் விருது உள்ளிட்ட 14 விருதுகளை இவர் வென்றுள்ளார்.

Tamil Poet Abdul Rahman passes away in Chennai