தியோதர் கோப்பை: தமிழக அணி சாம்பியன்

தியோதர் கோப்பை: தமிழக அணி சாம்பியன்
Tamil Nadu wins Deodhar Trophy 2017

தியோதர் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரை தமிழக அணி வென்றது. இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய பி அணியும் தமிழக அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த தமிழக அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்த 303 ரன்கள் எடுத்தது.

304 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய பி அணி 46.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 261 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் தமிழக அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் சாம்பியன் பட்டத்தை வென்றது.

Tamil Nadu wins Deodhar Trophy 2017