பஸ் கட்டண உயர்வை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்

பஸ் கட்டண உயர்வை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்
Tamil Nadu people will accept bus fare says minister Sellur Raju

பஸ் கட்டண உயர்வை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்: செல்லூர் ராஜூ

மதுரை: தமிழகத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு பஸ் கட்டணம் திடீர் என்று உயர்த்தப்பட்டுள்ளது, இது குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:

பஸ் கட்டண உயர்வு தவிர்க்க முடியாத நிலையில் உயர்த்தப்பட்டு உள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக பஸ் கட்டணம் உயர்த்தப்படவில்லை. டீசல் விலை உயர்வு, பணியாளர்கள் படி உயர்வு, புதிய பஸ்கள் வாங்கப்பட வேண்டும் என்ற பல்வேறு சூழ்நிலைகளில் வேறு வழியின்றி பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

பக்கத்து மாநிலங்களை விட குறைவாகத்தான் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பக்கத்து மாநிலங்களில் நமது மாநிலத்தை விட பல மடங்கு கூடுதலாக பஸ் கட்டணம் உள்ளது. மக்கள் இதை ஏற்றுக்கொள்வார்கள்.

எதிர்க்கட்சிகள் அரசியல் காரணங்களுக்காக இதை வேண்டும் என்றே எதிர்க்கிறார்கள். பணமதிப்பீடு அதிகரித்து உள்ளது. இன்று ஒரு ரூபாய்க்கு மதிப்பில்லாமல் போய்விட்டது.

Tamil Nadu people will accept bus fare says minister Sellur Raju