ஹைட்ரோ கார்பன் திட்டத்தை பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து அண்ணா - ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரிக்கை வைத்தார். அவர் பிரதமரை சந்தித்த பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளின் விவரம் பின் வருமாறு.

கேள்வி:- பெட்ரோல், டீசல் விலைக்கான வரி குறைக்கப்படுமா:

பதில்:- தமிழக அரசை பொறுத்தவரை பல்வேறு துறைகளில் நிதி ஆதாரங்கள் தேவைப்படுகிறது, கடந்த ஆண்டு 7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி அரசு ஊழியர்களுக்கு 14.119 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் போக்குவரத்துக்கு ஊழியர்களுக்கு வழங்க கூடிய நிலுவைத்தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றது.

இப்படி பல்வேறு துறைகளிலும் வளர்ச்சிப்பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதால் நிதி ஆதாரத்தை உருவாக்கி பெட்ரோல், டீசல் விலை தொடர்பான கோரிக்கை பரிசீலிக்கப்படும்.

மேலும் ஹைட்ரோ கார்பன் பற்றிய கேள்விகள் வருமாறு:

கேள்வி:- ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஒரு தெளிவான நிலைபாட்டை தமிழக அரசு தெரியப்படுத்தவில்லையே?

பதில்:- பொது மக்களுக்கு பாதிக்க கூடிய எந்த திட்டமும் தமிழகத்தில் அனுமதிக்கப்பட மாட்டாது என்று ஏற்கனவே தெளிவுபடுத்தி இருக்கிறோம், என்றும் விளக்கம் அளித்தார்.