தமிழக விவசாயிகள் மருத்துவமனையில் அனுமதி

தமிழக விவசாயிகள் மருத்துவமனையில் அனுமதி
Tamil Farmers protesting in Jantar Mantar admitted to hospital

புது டெல்லி: தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் டெல்லியில் உள்ள ஜந்தர்மந்தரில் கடந்த மாதம் 14–ந் தேதி முதல் போராட்டம் நடத்திவருகின்றனர்.

விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், தமிழகத்திற்கான வறட்சி நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்து வருகிறது.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டனர், இதை அடுத்து உண்ணாவிரதம் இருந்ததில் விவசாயிகள் சிலர் உடல்நிலை சரியில்லாமல் போன காரணத்தினால் டெல்லியில் உள்ள ஆர்.எம்.எல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

Tamil Farmers protesting in Jantar Mantar admitted to hospital