டி.டி.வி. தினகரன் கைது: டெல்லி போலீசார் அதிரடி

டி.டி.வி. தினகரன் கைது: டெல்லி போலீசார் அதிரடி
TTV Dinakaran was arrested by Delhi police

புது டெல்லி: தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அ.தி.மு.க. இரண்டு அணிகளாக உடைந்தன. அதில் ஒரு அணி சசிகலாவுக்கு ஆதரவாகவும், மற்றொரு அணி ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாகவும் செயல்பட்டு வந்தது.

அ.தி.மு.க. இரண்டாக உடைந்ததால், அந்த கட்சியின் சின்னமான "இரட்டை இலை" சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்துள்ளது, இரட்டை இலை சின்னத்தை யாருக்கு கொடுக்கலாம் என்று தேர்தல் ஆணையம் ஆய்வு செய்துவருகிறது. இந்நிலையில் சசிகலா அணியை சேர்ந்த டி.டி.வி.தினகரன் “இரட்டை இலை” சின்னத்தை பெறுவதற்காக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர் மூலம் தேர்தல் ஆணையத்திற்கு ரூ.50 கோடி ரூபாயை லஞ்சமாக கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக டி.டி.வி.தினகரன் மீது 3 பிரிவுகளில் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் இது குறித்த விசாரணைக்கு வருமாறு டெல்லி போலீசார் அளித்த சம்மனை ஏற்று டி.டி.வி. தினகரன் கடந்த சனிக்கிழமை டெல்லி சென்றார். சாணக்கியாபுரியில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் போலீஸ் முன்பு அவர் ஆஜரானார். அவரிடம் தொடர்ந்து 4 நாட்களாக டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரனை நேற்று டெல்லி போலீசார் அதிரடியாக கைதுசெய்துள்ளனர்.

TTV Dinakaran was arrested by Delhi police