டிடிவி தினகரன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்

டிடிவி தினகரன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்
TTV Dinakaran to campaign Tamil Nadu

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட தினகரன் கடந்த மாதம் 3-ந்தேதி ஜாமீனில் விடுதலையானார். அதன் பின்னர் பெங்களூர் சிறையில் சசிகலாவை சந்தித்த தினகரன் எடப்பாடி அணியினரின் எதிர்ப்பு குறித்து புகார் தெரிவித்தார்.

பின்னர் பேட்டி அளித்த அவர் 60 நாட்கள் வரை சசிகலா காத்திருக்க சொல்லி இருக்கிறார். அதுவரை அமைதியாக இருப்பேன் என்று கூறினார். இந்த 60 நாள் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 5-ந்தேதியுடன் முடிகிறது. இதன் பின்னர் தினகரன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய முடிவு செய்துள்ளார்.

TTV Dinakaran to campaign Tamil Nadu