ஆளுநரிடம் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மனு

ஆளுநரிடம் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மனு
TTV Dinakaran support MLAs meets Governor Vidyasagar Rao

சென்னை: அதிமுகவில் பிரிந்திருந்த பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அணிகள் நீண்ட இழுபறிக்கு பின்னர் நேற்று ஒன்றாக இணைந்தனர். அப்போது ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராகவும், பாண்டியராஜன் அமைச்சராகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில், டி.டி.வி.தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து ஆளுநரிடன் தங்களது கோரிக்கை கடிதத்தை அளித்தனர்.

ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்த பின்பு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏவான தங்க தமிழ்ச்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது "முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சரிவர செயல்படாததால், அவரை மாற்றக் கோரி ஆளுநரிடம் மனு அளித்துள்ளோம்" என்று கூறினார்.

TTV Dinakaran support MLAs meets Governor Vidyasagar Rao