தினகரனின் அரசியல் பயணம் முடிந்து விட்டது

தினகரனின் அரசியல் பயணம் முடிந்து விட்டது
TTV DInakarans political journey is over

சென்னை: தமிழ்நாட்டின் முன்னால் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரான கே.பி. முனுசாமி இன்று நிருபர்களை சந்தித்து பேசினார் அப்போது அவர் கூறியதாவது:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி. தினகரன் பணம் பட்டுவாடா செய்தது உலகத்திற்கே தெரியும், பணப்பட்டுவாடா செய்யவில்லை என்று டி.டி.வி. தினகரன் பொய்யான தகவல்களை கூறி வருகிறார். அவரது அரசியல் பயணம் முடிந்து விட்டது.

ஆர்.கே.நகரில் எப்போது தேர்தல் நடந்தாலும் மதுசூதனன் தான் பெரும்வாரியான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார், தி.மு.க.வும் வாக்காளர்களுக்கு ரூ.2000 கொடுத்துள்ளது.

வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றிய ஆவணங்கள் அனைத்தும் உண்மை. அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கைப்பற்றிய ஆவணங்களில் உள்ள தகவல் அனைத்தும் உண்மையானவை.

என்று அவர் கூறினார்.

TTV DInakarans political journey is over