நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் கைது

நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் கைது
TN Farmers done Nudity protest in front of PM Office

புது டெல்லி: தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் டெல்லியில் உள்ள ஜந்தர்மந்தரில் கடந்த மாதம் 14–ந் தேதி முதல் போராட்டம் நடத்திவருகின்றனர்.

விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், தமிழகத்திற்கான வறட்சி நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்து வருகிறது.

இந்நிலையில், பிரதமர் அலுவலகத்தில் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக விவசாயிகள் மனு அளித்தனர், மனு அளித்த பின்னர் வெளியே வந்த விவசாயிகள் திடீரென ஆடைகளை களைந்து நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்த போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள், “பிரதமர் எங்களை பார்க்காததால் ஆடையின்றி போராட்டம். இதுவரை பிரதமர் எங்களை சந்திக்காததால் எங்களுக்கு வேறு வழியில்லை. பிரதமரை சந்திக்க வைப்பதாக கூறி எங்களை ஏமாற்றிவிட்டனர். இது தான் எங்களது நிலைமை” என்று கூறினர்.

TN Farmers done Nudity protest in front of PM Office