வடபழனி தீ விபத்து: முதலமைச்சர் நிதியதவி

வடபழனி தீ விபத்து: முதலமைச்சர் நிதியதவி
TN CM Palaniswami announce fund for Vadapalani victims

சென்னை: சென்னை வடபழனி சிவன் கோவில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இன்று அதிகாலை 4.45 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது, இந்த தீவிபத்தில் அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் ( இரண்டு குழந்தைகள் உட்பட) உயிரிழந்துள்ளனர். படுகாயங்களுடன் 5 பேர் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தீ விபத்துக்கான காரணம் மின்கசிவு என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த கோர தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார், மேலும் இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா 25,000 ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.

TN CM Palaniswami announce fund for Vadapalani victims