நீட் தேர்வு கெடுபிடி: மனித உரி்மை மீறலாகும்

நீட் தேர்வு கெடுபிடி: மனித உரி்மை மீறலாகும்
Students restriction on NEET exam is violation of human rights

சென்னை: எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளில் சேர "நீட்" தேர்வு நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது, இந்த நீட் தேர்வினை எழுத வந்த மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் தேர்வு எழுதவந்த மாணவர்கள், அவர்களுடைய பெற்றோர்களிடையே கோபத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இது குறித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களுக்கு கூறியதாவது:

தமிழகத்தில் "சி.பி.எஸ்.இ" வாரிய அதிகாரிகள் மாணவர்களிடம் நடத்திய கெடுபிடிகள் மனித உரி்மை மீறல்களாகும். மாணவர்களை குற்றவாளிகள் போல் நடத்தியது மன்னிக்க முடியாததாகும்.

இந்த கெடுபிடியினால் மாணவிகள் அழுது கொண்டே தேர்வு அறைக்கு சென்றது பரிதாபத்தை ஏற்படுத்தியது. வடஇந்தியாவில் மட்டும் இத்தகைய கெடுபிடிகள் காட்டப்படாதது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

Students restriction on NEET exam is violation of human rights