தமிழ்நாட்டில் எய்ட்ஸ் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

தமிழ்நாட்டில் எய்ட்ஸ் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

சர்வதேச எய்ட்ஸ் நோய் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 1 ஆம் நாள் கடைப்பிடித்து வருகின்றது, அதன்படி எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவல் வெளியிடப்பட்டது. 

அதில் தமிழ்நாட்டில் எய்ட்ஸ் நோய் தாக்குதல் அதிகரித்து உள்ளது. 2015-ம் ஆண்டில் 20 முதல் 25 வயது வரையிலான இளைஞர்கள் 432 பேரை எய்ட்ஸ் தாக்கி இருந்தது. 2017-2018-ம் ஆண்டில் அதன் எண்ணிக்கை 554 ஆக உயர்ந்துள்ளது.

2015 முதல் 2016-ம் ஆண்டில் 60 வயதுக்கு மேற்பட்டோரில் 435 பேரை எய்ட்ஸ் நோய் தாக்கியிருந்தது. அது 2017-2018-ம் ஆண்டில் 536 ஆக அதிகரித்தது. தற்போது தமிழ்நாட்டில் 1,12,778 எய்ட்ஸ் நோயாளிகள் உள்ளனர்.