தம்பிதுரை, விஜயபாஸ்கர் மீது பரபரப்பு புகார்

தம்பிதுரை, விஜயபாஸ்கர் மீது பரபரப்பு புகார்
Senthil balaji complaint on Thambidurai and vijayabhaskar

சென்னை: மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது அதிமுகவின் முன்னால் அமைச்சரும், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ-வுவான செந்தில் பாலாஜி போலீஸில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அவருடைய புகார் மனுவில், கரூர் மாவட்டம் வாங்கல் குப்புச்சி பாளையத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைக்கும் கட்டிட பணிகளை துவக்கவிடாமல் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தடுத்து வேறு இடத்துக்கு மாற்ற முயற்சிகின்றனர்.

மேலும், இரண்டு பேரையும் கண்டித்து வரும் 28-ம் தேதி காலை 9 மணிக்கு கரூர் தாலுகா அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டும் கரூர் நகர காவல் ஆய்வாளருக்கு புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.

Senthil balaji complaint on Thambidurai and vijayabhaskar