மூத்த பத்திரிகையாளர் நாகை தருமன் இயற்கை எய்தினார் ! சினிமா பத்திரிகையாளர் சங்கம் இதய அஞ்சலி !!
ஆழ்ந்த இரங்கல்.
மூத்த பத்திரிகையாளர் நாகை தருமன் இயற்கை எய்தினார் ! சினிமா பத்திரிகையாளர் சங்கம் இதய அஞ்சலி !!
'புரட்சித்தலைவர்' எம்.ஜி.ஆரின் அன்புக்குரியவர்களில் ஒருவராக இருந்த மூத்த பத்திரிகையாளரான திரு. நாகை தருமன் (வயது 76) உடல் நலக்குறைவு காரணமாக நேற்று பிற்பகல் 12.15. மயிலாப்பூரிலுள்ள தனது இல்லத்தில் காலமானார்.
சிறந்த எழுத்தாற்றல் கொண்ட இவரை தனது அண்ணா, தாய் இதழ்களில் எம்.ஜி.ஆர். பயன்படுத்திக்கொண்டார். 'நவமணி' நாளிதழ் மற்றும் பொம்மை, பேசும் படம், சினிமா எக்ஸ்பிரஸ்... ஆகிய வார , மாத இதழ்களில் எழுதியவர் நாகை தருமன்.
பின்னாளில் 'இதயக்கனி' யில் இவரது கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்தன.
'இதயக்கனி' படத்திற்கு வசனம் எழுதிய ஜெகதீசனின் படங்களில் மக்கள் தொடர்பிலும் இருந்தவர் திரு. நாகை தருமன்.
சிவாஜி நடித்த 'துணை' படத்திற்கு எம்.ஜி.ஆர். ஆசியுடன் கதை எழுதியுள்ளார். இவர் எம்.ஜி.ஆர். பற்றி வெளியிட்ட நூல்களில் ''சந்திரனைப் போற்றும் நட்சத்திரங்கள்'' குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான பெருமைகளுக்குரிய திரு.நாகை தருமனை எமது , 'சினிமா பத்திரிகையாளர் சங்கம் ' ஐந்து சீனியர் பத்திரிகையாளர்களில் ஒருவராக தனது அறுபதாம் ஆண்டு விழாவில் ஐந்து ஆண்டுகளுக்கு முன் தேர்ந்தெடுத்து, அன்றைய சினிமா பத்திரிகையளர் சங்கத் தலைவர் அமரர் திரு.மேஜர் தாசன் தலைமையில் பாராட்டு விழா நடத்தி கெளரவித்தது. அவ்விழாவில் கெளரவிக்கப்பட்ட திரு.நாகை தருமன் உள்ளிட்ட ஐந்து சீனியர் பத்திரிகையாளர்களுக்கும், நடிகர் பத்மஸ்ரீ திரு.கமல்ஹாசன் தலா
1-லட்ச ரூபாயும் , நடிகரும் நடன இயக்குனரும் , இயக்குனருமான திரு. ராகவேந்திரா லாரன்ஸ் தலா 50-ஆயிரம் ரூபாய் எனவும் ஐந்து பத்திரிகையாளர்களுக்கும் தலா ஒன்றரை லட்ச ரூபாய் நன்கொடையாக விழா மேடையிலேயே வழங்கினர். (நான் , அன்று சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் பொருளாளர் பதவியில் இருந்தேன்.)
மார்கண்டேய நடிகர் திரு.சிவக்குமார் உள்ளிட்ட இன்னும் சில திரை பிரபலங்களும் கலந்துகொண்ட அன்றைய நிகழ்வு., ஆச்சி மனோராமாவின் இறுதி மேடை நிகழ்வென்பதும் குறிப்பிடத்தக்கது.
சினிமா பத்திரிகையாளர்களில் சீறும் , சிறப்புமாக பவனி வந்து , நேற்று முன்தினம் இயற்கை எய்திய திரு.நாகை தருமன் அவர்களது ஆன்மா சாந்தி பெற நானும் , எமது "சினிமா பத்திரிகையாளா சங்கமு"ம் இறைவனை பிரார்த்திக்கிறோம்.
D.R.பாலேஷ்வர்,
தலைவர்,
சினிமா பத்திரிகையாளர் சங்கம் , சென்னை - 24
Cell No - 9840141775