சத்தியம் எக்ஸ்பிரஸ் செய்திகள்
அரைமணி நேரத்தில் மின்னல் வேகத்தில் இடைவெளி இன்றி செய்திகளை வழங்குகிறது "சத்தியம் எக்ஸ்பிரஸ் செய்திகள்". திங்கள் முதல் சனி வரை தினமும் காலை 9:00 மணிக்கும், மதியம் 1:00 மணிக்கும் மற்றும் மாலை 4:00 மணிக்கும் சத்தியம் தொலைக்காட்சியில்ஒளிபரப்பாகிறது .
நாட்டு நடப்புகளை உண்மைத்தன்மை மாறாமல் உங்களுக்கு வழங்குகிறது சத்தியம் தொலைக்காட்சி. இதில் முதலில் தமிழகம் மற்றும் புதுவை செய்திகள், அதில் மாவட்டம் வாரியாக ஒவ்வொரு செய்திகளையும் அலசுகிறது. அடுத்தது தேசிய செய்திகள், அதில் இந்தியா முழுவதும் தற்போது நடக்கும் தேசிய அரசியல்,மாநில வாரியாக நடக்கும் முக்கிய நிகழ்வுகள் உங்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது. அடுத்தது உலக செய்திகள் இதில் உலக நாடுகளின் நடப்பு நிகழ்வுகள், போர் பதற்றம், உலக தலைவர்களின் அரசியல் மாற்றம் இதனுடன் விளையாட்டு, வானிலை என அனைத்தையும் முழு விபரங்களுடன் உங்களுக்கு வழங்குகிறது "சத்தியம் எக்ஸ்பிரஸ்". இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் ரபியா .