தமிழகத்தின் குரல்

தமிழகத்தின் குரல்

தமிழகத்தில் மட்டுமே நடக்கும் நிகழ்வுகளை விரிவாகவும், துல்லியமாகவும் வழங்குகிறது தமிழகத்தின் குரல் செய்தி தொகுப்பு. திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 6:00 மணிக்கு இந்நிகழ்ச்சி சத்தியம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

தமிழகத்தின் குரல் செய்தி தொகுப்பில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் நிகழ்வுகளின் தொகுப்பை உண்மைத்தன்மை மாறாமல் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் நிலவும் அன்றாட மக்கள் பிரச்சனைகள், போராட்டங்கள், கொண்டாட்டங்கள், அரசியல் நிலவரம் என அன்றைய நாள் முழுக்க நடைபெறும் நிகழ்வுகளை ஒன்று விடாமல் முழுமையாக வழங்குகிறது. 

தமிழகம் முழுக்க நடைபெறும் செய்திகளை மட்டுமே ஒட்டுமொத்தமாக அரைமணியில் வழங்கும் தமிழகத்தின் குரல் செய்தி தொகுப்பை ஸ்ரீராம் தொகுத்து வழங்குகிறார்...