சத்தியம் தொலைக்காட்சியில் ‘தடயம்‘
சத்தியம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குற்ற சம்பவ நிகழ்ச்சி 'தடயம்' . இந்நிகழ்ச்சி சனிக்கிழமை இரவு 11:00 மணிக்கும் ,மறுஒளிபரப்பு ஞாயிறு இரவு 11:00 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.
கல்லறையில் சம்மட்டி அடி கொடுத்து புதைக்கப்பட்ட உண்மைகளை உள்நுழைந்து அநீதியை பிளக்கச்செய்வதும், குற்றத்திற்கான காரணங்களை அலசி ஆராய்ந்து வழக்குகளின் உண்மைத்தன்மையை அறிக்கை படுத்துவதும், முடிக்கப்படாமல் முடங்கிக்கொண்டிருக்கும் மர்ம வழக்குகளின் தற்போதைய விசாரணை நிலவரத்தை நியாயத்தின் கண்முன்னே கொண்டு நிறுத்துவதும், பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இவ்வுலகில் நம்மைச்சுற்றி அச்சுறுத்திக்கொண்டிருக்கும் மாஃபியா கும்பல்களின் இரக்கமற்ற குற்ற செயல்களை தோலுரித்து காட்டி சமுதாயத்தில் நீதியை நிலைநாட்ட சத்தியம் தொலைக்காட்சியின் பெரும் முயற்சியாய் ஒளிபரப்பாகும், அச்சத்தை தவிர்த்து நீதியை தேடிக்கொடுக்கும் நிகழ்ச்சி " தடயம் - மர்ம முடுச்சுக்களின் திறவுகோல் "சனிக்கிழமை இரவு 11:00 மணிக்கும் ,மறுஒளிபரப்பு ஞாயிறு இரவு 11:00 மணிக்கும் சத்தியம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. இந்நிகழ்ச்சியை ராம்.செ தொகுத்து வழங்குகிறார்.