உரக்க சொல்வோம் உலகிற்கு

உரக்க சொல்வோம் உலகிற்கு
Uraka Solvom Ulagirku

(ஞாயிறு மதியம் 12.30 மணி முதல் 1.00 மணி வரை)

இது சப்தமில்லாமல் மறைக்கப்பட்ட உண்மைகளையும், அதிகார துஷ்ப்பிரயோகங்களையும், இயற்க்கை வளங்களையும் கொள்ளையிடும் அதிகாரிகள் முதல் அடிமட்ட வர்க்கத்தினர் செய்யும் குற்றங்கள் வரை மக்கள் போராடி கிடைக்காத நியாயத்தையும், அரசாங்கத்திற்கும், சட்டத்திற்கும் மக்களோடு மக்களாய் இணைந்து அரசின் கவனத்துக்கு எடுத்து சொல்லும் சிறு முயற்சிதான் இந்த “உரக்க சொல்வோம் உலகிற்கு” நிகழ்ச்சி.

சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் அதிகார துஷ்ப்பிரயோகம், தொடரும் இன படுகொலை, மறுக்கப்பட்ட நீதி, அபகரிக்கப்பட்ட இயற்க்கை வளங்கள் முதல் எழுச்சி, வீழ்ச்சி வரை விரல் நுனியில் அனைத்து விவரங்களையும் சிறப்பான ஒளிப்பதிவோடு தொகுத்து வழங்குகிறார் தொகுப்பாளர் அரவிந்த் தாக்க்ஷன.

இந்நிகழ்ச்சி அரசின் கவனத்திக்கும், சட்டத்திற்கும் கொண்டு செல்லப்பட்டு சில மாற்றங்களை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு வாரமும் ஞாயிறு மதியம் 12.30 மணி முதல் 1.00 மணி வரை சத்தியம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். அதன் மறுஒளிபரப்பு திங்கட்கிழமை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும்.

Uraka Solvom Ulagirku