“பசங்க”

(வாரம்தோறும் சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு)
சத்தியம் தொலைக்காட்சியின் புதிய நிகழ்ச்சியாக வருகிறது “பசங்க” இது முற்றிலும் சிறுவர்களுக்கான நிகழ்ச்சி. வாரம்தோறும் சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கும் அதன் மறுஒளிபரப்பு ஞாயிறு மாலை 7.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கற்றுக்கொள்ளும் வகையில் தரமான பகுதிகள் ஒளிபரப்படுகின்றன.
சிறுவர்களின் தனி திறமையை வெளிப்படுத்தும் பகுதி, குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக மருத்துவர்களின் மருத்துவ ஆலோசனை பகுதி, கைவினை பொருட்கள் எப்படி செய்வது, பொழுதுபோக்கு விளையாட்டுக்கள், உலகை சுற்றி கற்றுக்கொள்ளும் வகையில் சுவையான தகவல்கள் என்று சுவாரசியமான பகுதிகளுடன் வருகிறது. இதனை லிவிங்ஸ்டன் மற்றும் ஜெமி தொகுத்து வழங்குகின்றனர்.
“பசங்க” நிகழ்ச்சி வாரம்தோறும் சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது அதன் மறுஒளிபரப்பு ஞாயிறு மாலை 7.30 மணிக்கு நமது சத்தியம் தொலைக்காட்சியில் காணாதவறாதீர்கள்.