தற்கொலை வழக்கில் என்னை சிக்க வைக்க முயற்சி நடக்கிறது

தற்கொலை வழக்கில் என்னை சிக்க வைக்க முயற்சி நடக்கிறது
Sathish kumar and Mariappan Thangavelu controversy

ஓமலூர்: கடந்த ஆண்டு ரியோ டிஜெனிரோவில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் தங்கம் வென்றவர் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு.

இரண்டு நாட்களுக்கு முன்பு மாரியப்பனின் சொந்த ஊராக ஓமலூர் அருகே உள்ள பெரியவடகம்பட்டியில், அவர் பயணம் செய்த காரின் மீது அதே ஊரைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவரின் இரு சக்கர வாகனம் மோதியுள்ளது, இதில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் எழுந்துள்ளது.

இந்நிலையில், சதீஷ்குமார் நேற்றிரவு ரெயில் மோதி தற்கொலை செய்துகொண்டுள்ளார், இந்த தற்கொலைக்கு மாரிமுத்து தான் காரணம் என்று சதீஷ்குமாரின் உறவினர்கள் புகார் கூறிவருகின்றனர்.

இது தொடர்பாக மாரிமுத்து கூறுகையில்: "இரண்டு நாள்களுக்கு முன் குடிபோதையில் சதீஷ்குமார் பைக்கில் வந்து, எனது கார் மீது மோதினார். இதில், கார் சேதம் அடைந்தது. இதுகுறித்து சதீஷ்குமாரின் பெற்றோரிடம் தெரிவித்தோம். தற்போது சதீஷ்குமார் மரணத்தில் என்னைத் தொடர்புபடுத்துகின்றனர். சதீஷ்குமார் தற்கொலையைப் பயன்படுத்தி, என்னை இந்த தற்கொலையில் சிக்கவைத்து பணம் பறிக்க முயற்சி நடக்கிறது" என்று குற்றம் சாட்டியுள்ளார்.

Sathish kumar and Mariappan Thangavelu controversy