சம்ரக்க்ஷணம்

சம்ரக்க்ஷணம்
Samrakshanam

விலங்குகள் பாதுகாப்பு

(சனி மற்றும் ஞாயிறு பிற்பகல் 02.00 மணிக்கு)

உங்கள் ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில் “சம்ரக்க்ஷணம்” என்ற புதிய நிகழ்ச்சி சனி மற்றும் ஞாயிறு பிற்பகல் 02.00 மணி முதல் ஒளிபரப்பாகிறது.

சம்ரக்க்ஷணம்: நாம் ஒன்றிணைந்து விலங்குகளின் பாதுகாப்பிற்காக உலகினை நகர்த்துவோம். மக்கள் மனதில் விலங்குகளின் பாதுகாப்பு பற்றிய எண்ணம் பரவலாக வளர்ந்து வருகின்றது. தற்போதைய காலகட்டத்தில் விலங்குகளின் பாதுகாப்பு என்பது உலகளவில் முக்கிய நெறிமுறையாகவும் மற்றும் அரசியல் சார்ந்த முக்கிய கருத்தாகவும் இருக்கிறது.

இப்பொழுது விலங்குகள் பாதுகாப்பினை ஒரு சர்வதேச கூட்டமைப்பு கண்காணித்து வருகின்றது, இருப்பினும் இன்னும் பல நாடுகளில் விலங்குகள் மனிதாபிமான சிகிச்சை கூட அடிப்படை அடித்தளங்களை தங்கள் சட்டங்களில் நடைமுறைப்படுத்தவில்லை, இன்னும் சில நாடுகளில் விலங்குகளின் பாதுகாப்பு குறித்த காலாவதியான சட்டங்களே நடைமுறையில் உள்ளது.

அனைத்து விலங்குகளும் ஓர் உள்ளார்ந்த புலனறிவுடைய உயிரினங்களாக இருக்கின்றன. விலங்குகள் மற்றும் அதன் நன்மைகள் பாதுகாப்பு பற்றிய அற்புதமான தொடர்தான் சம்ரக்க்ஷணம். சனி மற்றும் ஞாயிறு பிற்பகல் 02.00 மணி முதல் ஒளிபரப்பாகிறது.

Samrakshanam