மும்பை இண்டியன்ஸின் பிரதான ஸ்பான்சர் சாம்சங்

மும்பை இண்டியன்ஸின் பிரதான ஸ்பான்சர் சாம்சங்
Samsung signs as the key Sponsor from Mumbai Indians

சென்னை, இந்தியா: மொபைல் ஃபோன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வாங்குவதற்கு மிகவும் விருப்பத்திற்குரிய மற்றும் நம்பகத்தன்மையுள்ள பிராண்டான சாம்சங் இந்தியா, இண்டியன் பிரிமியர் லீக்கின்(IPL) நடப்பு சாம்பியனான மும்பை இன்டியன்ஸின் பிரதான ஸ்பான்சராக ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த போட்டியில் 11வது எடிஷன் ஏப்ரல் 7 அன்று துவங்கி மே 27,2018 வரை நடக்கிறது.

இதைத் தொடர்ந்து, ரசிகர்கள் தங்கள் கிரிக்கெட் ஹீரோக்களான ரோஹித் ஷர்மா, ஹர்திக் பாண்டியா மற்றும் கெய்ரான் பொல்லார்ட் இந்த சாம்சங் லோகோ டீம் ஜெர்சீக்களின் முன்பக்கத்தில் உள்ளதைப் பார்க்க முடியும்.

சாம்சங்க் மற்றும் மும்பை இண்டியன்ஸுக்கு பிராண்ட் என்ற முறையில் நிறைய ஒற்றுமை உள்ளது. இரண்டுமே நிலைத்திருப்பது, எல்லோருக்கும் தெரிந்தது. மும்பை இன்டியன்ஸ் மட்டுமே ஐபிஎல்இல்  3 முறை பட்டம் வென்றுள்ளது. சாம்சங் இந்தியாவில் மிகவும் விருப்பத்திற்குரிய மற்றும் நம்பகத்தன்மையுள்ள பிராண்ட் ஆகும். மேலும், இது நெ.1 இடத்தை பல சேவைகளில் பல வருடங்களாகத் தக்கவைத்துள்ளது. நாங்கள் பிரதான ஸ்பான்சராக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த இரண்டு டாப் பிராண்டுகளும் இணைவது ஐபிஎல் போட்டிகளிலும் உலகெங்கிலும் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்களின் மனங்களிலும் இன்னும் உற்சாகத்தை ஏற்படுத்தும் எங்கிறார் திரு. ரஞ்சிவ்ஜித் சிங், சீஃப் மார்க்கெடிங் அதிகாரி, சாம்சங் இந்தியா.

மும்பை இன்டியன்ஸின் பேச்சாளர் குறிப்பு சொல்கிறது, “ சாம்சங் எங்களின் பிரதான ஸ்பான்சராக இருப்பது எங்களுக்கு பெருமையாக இருக்கிறது. சாம்சங், இன்றளவில், இந்தியாவின் மிகவும் நம்பகத்தன்மையுள்ள பிராண்ட். இது இளைஞர்களின் ரசனையோடு ஒத்துப்போகிறது. இரண்டு பிராண்டுகளும் ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியைத் தருவது உறுதி”.

இந்தியாவில் நெ.1 ஸ்மார்ட்போன் பிராண்டான சாம்சங், மைதான எல்லையிலுள்ள போர்டுகளிலும் பிளேயர் டக் அவுட்களிலும் காணப்படும். மும்பை இண்டியன்ஸின் ஹோம் கிரவுண்டான வான்கடே ஸ்டேடியத்தில், நார்த் ஸ்டாண்ட் சாம்சங்கின் ஸ்டாடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டோர்ணமென்ட்டின் போது, சாம்சங்கின் அஃபீஷியல் ஆன்லைன் ஸ்டோரானது, டிவென்டி20 தீம் உள்ள மொபைல் தயாரிப்புகளை ஏப்ரல் 12-14, 2018 தேதிகளில் விற்பனை செய்யும்.

ரிலயன்ஸ் இண்டஸ்ட்ரீசுக்கு சொந்தமான மும்பை இண்டியன்ஸ் 2013,2015 மற்றும் 2017 லீக் ஃபைனலை வென்று, ஐபிஎல்-இல் இன்றுவரை மிகவும் வெற்றிகரமான டீமாக இருந்துவருகிறது. இது 2011 மற்றும் 2013 சாம்பியன்ஸ் லீக் டிவென்டி20 போட்டியையும் வென்றது. டீமின் பெர்பாமன்ஸ் களத்தில் நீடித்த திறனை வெளிப்படுத்தி, பெரிய ரசிகர் பட்டாளத்தை இந்தியாவிலும் உலகெங்கிலும் ஈட்டியிருக்கிறது

இந்தியா முழுவது ஜியோ 4ஜி எல்டிஈ நெட்வொர்க் அமைத்திருப்பதால் சாம்சங் ரிலயன்ஸ் ஜியோவின் பார்ட்னரும் கூட. இது உலகிலேயே மிகப் பெரிய மற்றும் பிசியான டேட்டா நெட்வொர்க் ஆகும்.

Samsung signs as the key Sponsor from Mumbai Indians