சாய் வித் செலிப்ரிட்டி’

சாய் வித் செலிப்ரிட்டி’
சாய் வித் செலிப்ரிட்டி’
சாய் வித் செலிப்ரிட்டி’
சாய் வித் செலிப்ரிட்டி’
சாய் வித் செலிப்ரிட்டி’
சாய் வித் செலிப்ரிட்டி’
சாய் வித் செலிப்ரிட்டி’

சாய் வித் செலிப்ரிட்டி’


முற்றிலும் மாறுபட்ட வித்தியாசமான நிகழ்ச்சிகளை ஜெயா டிவி தொடர்ந்து வழங்கிக் கொண்டு வருகிறது.அந்த வரிசையில் இப்போது ‘சாய் வித் செலிப்ரிட்டி’ எனும் புதிய நிகழ்ச்சியும் இணைந்துள்ளது. இந்நிகழ்ச்சி ஜெயா தொலைக்காட்சியில்  ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை 5:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

இந்த நிகழ்ச்சியில் மூன்று சுற்றுகள் உள்ளன,12 வித்தியாசமான’ டீ’ களுடன் ஒரு டீ பார்ட்டி உடன் முதல் சுற்று ஆரம்பமாகிறது .முதல் சுற்றே முற்றிலும் மாறுபட்ட சுற்றாகவும் விருந்தினர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தும் விதமாக அமைந்திருக்கும். மேலும் நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்க  மற்றும் விருந்தினர்களுக்கு  இன்ப அதிர்ச்சி அளிக்க நகைச்சுவை மன்னர்கள் அடிக்கும் லூட்டி உடன் அட்டகாசம் நிறைந்த இரண்டாம் சுற்று காத்திருக்கும். எதிர்பாராத கேள்விகளுடன் மூன்றாவது சுற்று அமைந்திருக்கும் .

வரும் வாரங்களில் சாய் வித் செலிப்ரிட்டி நிகழ்ச்சியில் நடிகர் மற்றும் இயக்குனருமான ரமேஷ் கண்ணா மற்றும் நடிகை ஷில்பா மஞ்சுநாத் கலந்து கொண்டு தான் கடந்து வந்த பாதை ,சினிமா ,காதல் ,கல்யாணம், வாழ்க்கையில் நடந்த வெளிவராத விஷயங்கள் பற்றிய ஜாலியான சாட்டுடன் நிறைந்திருக்கிறது . இந்நிகழ்ச்சியை பவித்ரா தொகுத்து வழங்குகிறார்.