எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு

எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு

தமிழில் சிறந்த நாவலுக்காக எழுத்தாளர் சோ. தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சூல் என்ற நாவல் எழுதிய எழுத்தாளர் சோ. தர்மனுக்கு தமிழில் சிறந்த நாவலுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் வேதனைகளை பதிவு செய்தவர், எழுத்தாளர் தர்மன். கோவில்பட்டி அருகே உள்ள உருளைக்குடி பகுதியை சேர்ந்தவர். "கூகை" என்ற நாவலுக்காக ஏற்கனவே தமிழக அரசின் விருதை தர்மன் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கரிசல் மண் சார்ந்த வேளாண் மக்களின் வாழ்வியலை பதிவு செய்யும் சோ. தர்மராஜ் என்ற இயற்பெயர் கொண்ட சோ. தர்மன் இதுவரை கூகை, ஈரம், தூர்வை, சோகவனம் உள்ளிட்ட 7 நூல்களை எழுதியுள்ளார்.