புலம் - தோட்டக்கலைத் துறை - தொடக்கவிழா

புலம் - தோட்டக்கலைத் துறை - தொடக்கவிழா
SRMIST induction programme for students in Horticulture Department

எஸ்.ஆர்.எம்.வேளாண்மையியல் புலம்- தோட்டக்கலைத் துறை - தொடக்கவிழா

எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில் நுட்பக்கல்வி நிறுவனத்தின் ஆறாவது புலமாக ,இன்று புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள வேளாண்மையியல் புலத்தின் கீழ் உருவாக்கம் பெற்றுள்ள, தோட்டக்கலைத்துறையில் புதிதாகச் சேர்ந்துள்ள மாணவர்களை வரவேற்கக்கூடிய ,தொடக்கவிழா இன்று (10/08/18)காட்டாங்குளத்தூர் வளாகத்தில் நடைபெற்றது.

எஸ்.ஆர்.எம். நிறுவனத்தின் வேந்தர் டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் தன் தலைமை உரையில் கூறும்போது, அடிப்படையில் நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். எனவே இந்தத் துறை உருவாக்கம் என்பது எனது கனவுத்திட்டம். .காலதாமதமான தொடக்கம் என்றாலும் ஒரு மிகப்பெரிய அளவிலான மாற்றத்தினை வேளாண்மைத் துறையில் மிக விரைவில் உருவாக்கவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள துறை இது.

இந்தியாவின் முதுகெலும்பு வேளாண்மை என்பது. ஆனால் நாம் இங்கு அதன் வளர்ச்சியைப் பற்றி அதிக முக்கியத்துவம் தராமலேயே இருந்திருக்கிறோம். வேளாண்மைத் துறையில் மிகுந்த வாய்ப்புகள் உள்ளன. அதிலும் குறிப்பாக தோட்டக்கலையில் அந்த வாய்ப்புகள் இன்னும் அதிகம். இதைப் பற்றிய புரிதல்கள் மிகக் குறைவாகவே மக்களிடம் உள்ளது.

அதிகப்படியான வேளாண்மையியல் கல்லூரிகள் உருவாகவேண்டும். அதுவும் கிராமங்களில் வரவேண்டும் என்பதே எனது எண்ணம். முன்காலங்களில் இந்தத்துறை பற்றிய போதிய கவனம் கொள்ளமையை மறந்துவிட்டு இனிவரும் காலங்களில் இத்துறையின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து முன்னேற்றப்பாதையில் செல்லவேண்டும் என்று தன் உரையில் டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் கூறிமுடித்தார்.

வாழ்வின் ஆதாரமே வேளாண்மை என எஸ்.ஆர்.எம். நிறுவனத்தின் துணைவேந்தர் முனைவர் சந்தீப் சன்செட்டி அவர்கள் கூறினார். வேளாண்மை உணவு, மருத்துவம், சுற்றுப்புறம், மேலாண்மை என்று பல துறைகளை ஒருங்கிணைக்கும் ஒரே துறையாக வேளாண்மைத்துறை இருப்பதைச் சுட்டிகாட்டி தன் உரையை நிறைவு செய்தார்.

வேளாண்மையியல் புலத்தின் புலத்தலைவர் முனைவர் தியாகராஜன் அவர்கள் தனது உரையில் தோட்டக்கலைத் துறையைத் தற்போது வழங்கியுள்ளோம். வரும் மாதங்களில் இந்தத்துறை சார்ந்த பல புதுமையான கிளைத்துறைகளை உருவாக்க உள்ளோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறினார். டாக்டர் பாரிவேந்தர் தலைமையில் ஒரு பிரம்மாண்டமான இயற்கையோடு இயைந்த வளாகத்தினை அச்சிரப்பாக்கத்தில் உருவாக்கிக் கொண்டு வருகின்றோம் என்று தனது உரையில் கூறி முடித்தார்.

SRMIST induction programme for students in Horticulture Department