எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனத்திற்கு விருது

எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனத்திற்கு விருது
SRMIST has been awarded the Top Indian Academic institution award

எஸ்.ஆர்.எம், அறிவியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்திற்குக் ‘காப்புரிமை மற்றும் வணிகமயமாக்கலுக்கான சிறந்த இந்தியக் கல்வி நிறுவனம்’ என்ற விருது வழங்கப்பட்டது.

எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், தொழில்நுட்ப வளர்சிக்கான அடிப்படை மற்றும் மேம்பட்ட ஆராய்ச்சி செயல்திட்டங்களை மேம்படுத்துதன் மூலம் அதன் கல்வியல் சகோதரத்துவத்தை ஊக்குவிக்கிறது. காப்புரிமை மற்றும் புதுமை மேலாண்மைப் பற்றிய பல பயிற்சிப்பட்டறைகள் ஒவ்வொரு ஆண்டும் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படுகின்றன. இந்தப் பட்டறைகள் ஆசிரியர்களுக்கும், ஆராய்ச்சி மாணவர்களுக்கும், மாணவர்களுக்கும் அவர்களின் திட்டங்களில் புதுமைகளை அடையாளம் காண தேவையான திறன்களைப் பற்றி சாத்தியமான காப்புரிமைக்கு ஆராய்ச்சி செய்கிறது.

இதுவரை SRMIST-க்கு 10 காப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 50-க்கும் மேற்பட்ட காப்புரிமைகள் வெளியிடப்பட்டுள்ளன மற்றும் 170 க்கும் மேற்பட்ட காப்புரிமைகள் அதனுடைய நன்மதிப்பிற்காக பதிவுசெய்யப்பட்டுள்ளன. SRMIST-யில் நன்கு வரையறுக்கப்பட்ட IP கொள்கை உள்ளது. இது, ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் போன்றவர்களின் கண்டுபிடிப்புகளைச் சமுதாயத்திற்குப் பெருமளவில் பயன்படும் வகையான பொருட்களாக மாற்றியமைக்கும் சாத்தியமான வழிகளைக் கருத்தில் கொண்டுள்ளது.

கண்டுபிடிப்பாளர்கள் தங்கள் காப்புரிமையை வணிகப்படுத்துவதற்குச் சாத்தியமான முதலீட்டாளர்களோ அல்லது தொழிற்துறையோ தொடர்புகொள்வதற்கான வாய்ப்பைப் பெறுவதற்கு இந்த நிறுவனம் ஒரு பொதுவான தளத்தை வழங்குகிறது. அதன் ஊழியர்களின் ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகளைப் பாதுகாப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் தேவையான வழிகளை மேற்கொண்டுள்ளது. மேலும், ஒரு திறமையான IP அமைப்பை பயன்படுத்தி அவர்களின் கண்டுபிடிப்புகளை திறம்பட பயன்படுத்த உதவுகிறது. இந்த நிறுவனமானது ஒரு வெற்றிகரமான தொழிற்துறை நிறுவன மாதிரியை அமைக்கும் முன்னோடியாக விளங்குகிறது.

நாட்டின் அறிவுசார் சொத்துடமைக்கு SRMIST-இன் சிறந்த பங்களிப்புகளை அடிப்படையாகக் கொண்டு வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தின் தொழிற்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையின், இந்தியாவின் அறிவுசார் சொத்து அலுவலகம், இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க தேசிய அறிவுசார் சொத்துரிமை - 2018 ஆண்டிற்கான “காப்புரிமை மற்றும் வணிகமயமாக்களுக்கான இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனம்’ என்ற விருதை SRM அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. புது டெல்லியில் ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற்ற விழாவில் இந்தியாவின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் மாண்பமை திரு. சுரேஷ்பாபு இவ்விருதை வழங்க, SRM அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் துணைவேந்தர் பேராசிரியர் திரு. சந்தீப் ஷான் ஷெட்டி பெற்றுக்கொண்டார்.

SRMIST has been awarded the Top Indian Academic institution award