தேசத் தந்தை மகாத்மா காந்தி அவர்களின் 150வது பிறந்த நாள் விழா

தேசத் தந்தை மகாத்மா காந்தி அவர்களின் 150வது பிறந்த நாள் விழா

தேசத் தந்தை மகாத்மா காந்தி அவர்களின் 150வது பிறந்த நாள் விழா இன்று SRM கல்வி நிறுவனத்தில் கொண்டாடப்பட்டது.

இந்திய அறிவியல் காங்கிரஸ் அமைப்புடன் SRM அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் இணைந்து தேசத் தந்தை மகாத்மா காந்தி அவர்களின் 150வது பிறந்த நாள் விழாவை அக்டோபர் 4, 2018 அன்று கொண்டாடியது. 

இந்நிகழ்ச்சியில் மகாத்மா காந்தி அவர்களைப் பற்றி கட்டுரைப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டி இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. பல்வேறு தலைப்புகளில் இந்த போட்டிகள் நடைப்பெற்றன இதில் நூற்றுக்கனகான மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். கட்டுரைப் போட்டியில் தவறுகளிடம் இருந்து கற்கும் உண்மை மற்றும் சுய பரிசோதனை என்னும் தலைப்பில் திரு. இராகுல் பந்யோ பதே முதல் இடத்தையும் தூய்மையே ஆரோகியத்திற்கு முதன்மை என எழுதி திரு. சுபம் திருப்பதி  இரண்டாவது இடத்தையும், எளிமை தேவையற்ற செலவை கட்டுப்படுத்தும் என எழுதி செல்வி. ஹினா கோட்லின் மூன்றாவது இடத்தையும் வென்றனர். பேச்சுப் போட்டியிலும் அதே தலைப்புகளில் திரு.அர்பித் ரங்கா முதல் இடத்தையும் செல்வி. ரஞ்னி செளந்தரராஜன் இரண்டாம் இடத்தையும் திரு. ரிஷப் செளத்திரி மூன்றாம் இடத்தையும் வென்றனர். போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு SRM எந்திரவிய பொறியியல் புலத்தின் புலத் தலைவர் முனைவர் கிங்ஸ்லி ஜப சிங் அவர்கள் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.